முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு 7 பேர் போட்டி

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.29 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு 7 பேர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த 7 பேர்களில் சட்ட அமைச்சர் சுரேஷ் குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை பதவியில் இருந்து விலகுமாறு பாரதிய ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கு 7 முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடுகிறது. 

மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஜெதீஷ் ஷெட்டர்,மாநில பா.ஜ. முன்னாள் தலைவர் சதானந்தா கவுடா, மாநில சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், மாநில பா.ஜ. தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பா ஆகியோர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் ஜெகதீஷ் ஷெட்டர் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர். சட்ட அமைச்சராக இருக்கும் சுரேஷ் குமார் ஒரே தொகுதியில் 5-க்கும் மேற்பட்ட தடவை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதற்கிடையில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுத்து வரும் எடியூரப்பாவின் மனம் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் மனம்மாறும்பட்சத்தில் தாம் விரும்பும் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று எடியூரப்பா நிபந்தனை விதிக்கலாம். அதை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டால் ஷோபா, ஆச்சார்யா ஆகிய இருவர்களில் யாராவது ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. அதேசமயத்தில் கர்நாடக மாநிலத்தில் கவுடா இனத்தவர்கள் அதிகமாக இருப்பதால் சதானந்தா கவுடாவை முதல்வராக கட்சி மேலிடம் நியமிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் முதல்வராக நியமிக்கப்பட்டால் தேவகவுடாவின் செல்வாக்கு குறைய வாய்ப்பு உள்ளது என்றும் பா.ஜ. மேலிடம் கருதுகிறது. இந்தநிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க கட்சி மேலிட தலைவர்கள் இன்று பெங்களூர் வருகிறார்கள். இதில் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங்,வெங்கைய்யா நாயுடு மற்றும் பலர் கலந்துகொள்ளலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் பா.ஜ. சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமாரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக தெரிகிறது. தேசிய அரசியலில் இருந்து மாநில அரசுக்கு வந்துவிட இவர் விரும்புவதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago