முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு கூடுதல் மழை

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,ஜூலை.- 30 - பாலைவன மாநிலம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு அதிகமாகவே மழை பெய்து வருகிறது. இதுவரை சராசரி மழை அளவை விட 11.7 சதவீதம் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூலை மாதம் முடிய ராஜஸ்தானில் 190.7 செ.மீ. மழை அளவுக்கு பெய்யும். ஆனால் இந்தாண்டு இதுவரை 211.7 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை பெய்துவருகிறது என்று அகில இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல் இந்த பருவமழை காலம் முழுவதும் ராஜஸ்தான் மாநிலத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நசீர்பாத், லால்சத், லட்மணஹர், ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முறையே 26, 17, 15 செ.மீ. மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்