முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க துறையில் இந்திய கம்பெனிகள் முதலீடு செய்ய- ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் அறிவுரை

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

உலான்பாதர்,ஜூலை.- 30 - மங்கோலியாவின் சுரங்கத்துறையில் இந்திய கம்பெனிகள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அறிவுரை கூறியுள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தென்கொரியா நாட்டின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மங்கோலியாவுக்கு சென்றார். அங்கு 3 நாள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மங்கோலியா நாட்டு அதிபர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-மங்கோலியா இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. தலைநகர் உலான்பாதர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாட்டீல் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மங்கோலியாவில் தாதுப்பொருட்கள் அதிக அளவில் இருக்கிறது. தங்கம், அலுமினியும், யுரேனியம் படிவும் அதிக அளவில் இருக்கிறது. இதை வெட்டி எடுப்பதில் இந்திய கம்பெனிகள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் எனறார். அதனால் கட்டுமானம் மற்றும் சுரங்க தொழிலுக்கு தேவையான கருவிகள் இந்தியாவில் இருந்து மங்கோலியாவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மங்கோலியாவில் தாது வளம் இருப்பதால் அந்த நாடு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மங்கோலியாவின் பொருளாதார வளரச்சி அடுத்த ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதீபா பாட்டீல் மேலும் கூறினார். அணுப்பொருள். கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் அங்கு சென்றிருப்பது முதல் தடவையாகும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்