முக்கிய செய்திகள்

அல் குவைதாவுடன் ஈரானுக்கு ரகசிய தொடர்பு - அமெரிக்கா

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜுலை - 30 - அல் குவைதா தீவிரவாத இயக்கத்துடன் ஈரான் நாட்டிற்கு ரகசிய தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானில் எசிதின் அப்தேல் அஜீஸ் என்பவர் கடந்த 2005 ம் ஆண்டுமுதல் அல்குவைதா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் உள்பட 6 தீவிரவாத தலைவர்களின் நிதி இயக்கத்தை அமெரிக்க நிதித்துறை தடைசெய்துள்ளது. இந்த தீவிரவாதிகளுக்கும் அல்குவைதா தீவிரவாதிகளுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் அரசுக்கும் அல்குவைதா இயக்கத்திற்கும் இடையே ஒரு ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு இந்த 6 தீவிரவாத தலைவர்களும் ஈரானில் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக ஈரானில் ஆட்களைச் சேர்ப்பது, அவர்களுக்கு பண உதவி செய்வது போன்ற காரியங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல ஒசாமா பின்லேடனின் தூதுவனாக ஈரானில் செயல்பட்டுவந்த பாகிஸ்தானைச் சேர்ந்த அதியாஹ் அப் அல் ரஹ்மான் பெயரும் அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்று உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: