முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவை ஏற்க முடியாது: பிரகாஷ் காரத்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

தலச்சேரி(கேரளம்), ஜூலை.- 31 - மத்திய அமைச்சரவை வடிவமைத்துள்ள லோக்பால் மசோதாவை ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கணரானின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய காரத் கூறியதாவது, இப்போது உள்ள வடிவில் பார்த்தால் இந்த மசோதாவினால் ஊழலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்க்காததை ஏற்க முடியாது. ஊழலை ஒழிக்க உறுதியான அதிகாரம் மிக்க சட்ட மசோதாவை கொண்டு வருவதாக காங்கிரஸ் கட்சி உறுதி கூறியிருந்தது. ஆனால் அந்த கட்சி அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. மேலும் இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். வலுவான சட்டம் உருவாக்க போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் காரத்.
ஊழல் வழக்குகளை விசாரிக்க இந்த மசோதாவில் எவ்வித விதிமுறைகளும் இல்லை. எனவே இது அதிகாரம் இல்லாத வெற்று மசோதா. நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்படாமல் அது அரசியல் சாசனமாகி விடும். எனவே அதை எதிர்க்க கூடாது என சில மத்திய அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. லோக்பால் மசோதா விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி போராடும். பிரதமரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால் அது ஸ்திரத்தன்மையை குலைத்து விடும் என காங்கிரஸ் கட்சியினர் கூறுவதும் ஏற்புடையது அல்ல என்றார்.
ஊழல் குற்றச்சாட்டில் பிரதமரை விசாரிக்க கூடாது என்பதற்கு அவர் ஒன்றும் புனிதர் அல்ல. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரதமரையும் விசாரிக்க முடியும். பிரதமரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரலாம் என காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டிருந்தது. கடந்த 1980, 1990 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத போதெல்லாம் இக்கருத்தை காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் இப்போது இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்