முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் பெண் உள்பட 11 அப்பாவிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்..ஜூலை .- 31 - பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்தில் உள்ள பெஷாவர் என்றநகரில்  பெண் உள்ளிட்ட 11 அப்பாவி பொது மக்கள்11 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானில் சன்னி முஸ்லீம் மக்கள்தான் அதிகமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். இதே போல ஷியா பிரிவு என்ற மைனாரிட்டி  முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில்  உள்ள பலுச்சிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரிலும் இந்த ஷியா பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஷியா பிரிவு மக்களை குறிவைத்து  லஸ்கர் இ  ஜங்வி என்ற  தீவிரவாத இயக்கம்  தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனித  தலங்களை தரிசிக்க சென்ற ஷியா பிரிவு மக்கள் மீது  நடந்த தாக்குதலில் குவெட்டா நகரில் 7 ஷியா பிரிவு மக்கள் கொல்லப்பட்டனர்.
நேற்றும் இதே குவெட்டா நகரில் ஷியா பிரிவு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட ஷியா பிரிவு மக்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு  தங்களது இயக்கம்தான் பொறுப்பு என்று லஸ்கர் இ ஜங்வி கூறியுள்ளது.
தடை  செய்யப்பட்ட இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அலி ஸெர்  ஹைதிரி கூறுகையில்  சன்னி பிரிவின் கல்வியாளர் மவுல்வி  கரீம் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஷியா பிரிவு மக்கள் மீது  இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: