முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் அருகே தீ விபத்து குறித்து விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஆக.2 - பொன்னும்,பொருளும் குவிந்து கிடக்கும் பத்மநாபசுவாமி கோயில் அருகே ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்சார கோளாறு காரணம் அல்ல என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் 108 வைணவ கோயில்களில் ஒன்றான பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து பார்த்ததில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்கம்,வைரம், வைடூரியம்,வைரம்,ரத்தினம் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்கள் இருந்தன. அந்த பொருட்கள் எடுக்கப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதுகுறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் கைவினைப்பொருட்கள் கடையில் நேற்றுமுன்தினம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் இந்தநேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தீ விபத்து குறித்து கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகள் நேற்று தீப்பிடித்த கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில் தீ விபத்துக்கு மின்சார கோளாறு காரணம் அல்ல என்றனர். ஜெனரேட்டர் வெடித்ததால் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தீ விபத்தை மாநில அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த சிவசேனா தொண்டர்கள் அவரை முற்றுகையிட முயன்றனர். கோயிலுக்கும் கோயிலை சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க அரசு தவறிவிட்டது என்று சிவசேனா தொண்டர்கள் குற்றஞ்சாட்டியினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்