முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா அரசின் அணுகு முறையால் மீனவர்கள் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம், ஆக.2 - நடுக்கடலில் இயந்திர பழுது ஏற்பட்டதால் தலைமன்னாருக்கு இழுத்து செல்லப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த விசைப்படகையும் அதில் சென்ற 5 மீனவர்களையும் ஒரே நாளில் திருப்பி அனுப்பியது இலங்கை அரசு. இதற்கு முன்பெல்லாம் இதுபோல திசைமாறி சென்றால் கூட சிறையில் அடைக்கும் இலங்கை அரசு தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததால் ஒரே நாளில் திருப்பி அனுப்பி விட்டதாக மீனவர்கள் பெருமிதத்துடன் கூறினர். 

கடந்த சனிக்கிழமையன்று ராமேஸ்வரத்திலிருந்து 600 விசைப்படகுகளும் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கரை திரும்பிவிட்ட நிலையில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. விசாரணையில் அவரது படகு நடுக்கடலில் இயந்திரபழுது ஏற்பட்டு இலங்கை தலைமன்னார் கடற்கரைக்கு காற்றின் வேகத்தால் இழுத்துச்செல்லப்பட்டதாகவும் அந்த கடற்கரையிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அந்த படகில் இருந்த மீனவர்களும் தலைமன்னார் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தகவலறிந்த இலங்கை அரசு அவர்களை உடனே விடுவிக்குமாறு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இலங்கை கடற்படை 5 மீனவர்களையும் அவர்களது படகையும் சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் காவல்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இது வரை தாங்கள் தெரியாமல் திசைமாறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றால் கூட தங்களை இலங்கை அரசு மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமைபடுத்திவரும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு இலங்கை அரசு எங்களை ஒரே நாளில் விடுவித்து விட்டது என்று பெருமிதத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago