முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மூலம் அண்ணாமலை பல்கலை.யில் எம்.பி.ஏ. படிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - இந்தியாவிலேயே முதன் முறையாக எம்.பி.ஏ. பட்ட படிப்பை ஆன்லைன் மூலம் நடத்துகிறது தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம். இதுகுறித்த விபரம் வருமாறு:- 

இந்தியாவில் மிகவும் பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலை  பல்கலைக்கழகம், தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய 361 டிகிரி மைன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ. பாடத்திட்டத்தை ஆன்லைன் மூலம் அளிக்கிறது. தொழில்நுட்பத்தின் பின்னணியில் பல்கலைக்கழகம் இத்தகைய முயற்சியை முதல் முறையாக மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழகம் 361 டிகிரி மைன்ட்ஸ் (361 டிஎம்) நிறுவனத்துடன் பிரத்யேக உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டது. இதன்படி கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு தேவையான பாடத்திட்டங்களை  தொழில்நுட்ப ரீதியில் அளிப்பதற்கு ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. 361 டிஎம் நிறுவனம் பல்கலைக்கழத்தின் தேவைக்கு தகுந்தபடி பயிற்சி அளித்தல், கலந்துரையாடல் ஆகியவற்றை பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தியது. முதல் கட்டமாக பல்கலையில் முழுநேரம் பயிலாத எம்பிஏ மாணவர்களுக்காக ஆன்லைன் மூலமான பாடத்திட்டத்துக்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கத்தின் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கூறுகையில், இந்த முயற்சியானது பல்கலையில் சேர்ந்து பயிலாத தொலைதூரக்கல்வி மூலம் பயிலும் எம்பிஏ மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இதன் மூலம் கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் அதே அளவு அனுபவத்தை தொலைதூரத்திலிருந்தபடி தொழில்நுட்பம் மூலம் அவர்கள் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல்கலையில் சேர்ந்து பயில்வதோடு,  உலகின் எந்த பகுதியிலிருந்தும், எந்த நேரத்திலும் அதிக கட்டணமின்றி பயிலலாம் என்றார்.

பல்கலைக்கழக்ததின் தொலைதூரக்கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் கூறுகையில், சர்வதேச தரத்துக்கு இணையான தொலைத்தூரக் கல்வியை பல்கலைக்கழகம் அளிப்பதால்தான் இப்பல்கலையில் தொலைதூரக்கல்வி பயிலும் மாணவர்களையும் தொழில்துறையினர் விரும்பி தேர்வு செய்கின்றனர். அந்த அளவுக்கு மாணவர்களை திறமைமிக்கவர்களாக உருவாக்கிறது  இந்த பல்கலைக்கழகம். இப்போது இப்புதிய வசதி மாணவர்களுக்கு மேலும் உபயோகமானதாக இருக்கும் என்றார்.

361 டிஎம் நிறுவனத்தின் உயர்கல்வி பிரிவு தலைவர் டெரன்ஸ் சகாயராஜ் கூறுகையில் அடுத்த தலைமுறை கல்வியானது  தொழில்நுட்ப உதவியோடு படிப்பதாகும். இதுதான் எதிர்கால கல்வி போதனை முறையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உயர் கல்வியில் இத்தகைய மாற்றம் நிச்சயம் உருவாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்