முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலமோசடி செய்ததாக முன்னால் காங். எம்.எல்.ஏ. மீது புகார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.2  - முறையான ஆவணங்கள் இல்லாமல் வாரிசுதாரர் இல்லாத சொத்தை பத்திர பதிவு செய்து ரூ.4.5 கோடிவரை மோசடி செய்து தங்களை மிரட்டி வருவதாக முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உ.பலராமன் உட்பட 4 பேர் மீது வடசென்னை வீட்டு உரிமையாளர் சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நாராயணப்ப நாயக்கன் தோட்டம் 1 முதல் 10 தெருக்கள் மற்றும் எம்.சி.ரோடு ஆகிய அடிமனையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியுள்ள உரிமையாளர்கள், தங்களுடைய வீட்டுக்கு சொத்து வரி செலுத்தியும், 

மின் இணைப்பும் பெற்று உள்ளனர்.

இந்த இடத்தின் அடிமனையை கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்திய கம்பெனி அப்பா அண்டு கோ என்ற நிறுவனத்தினர் திம்மப்ப நாயுடு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனமாக கொடுத்துள்ளனர். மேலே சொல்லப்பட்ட அடிமனைக்கு உரிமையானவர்கள் என்று அறிவித்துக்கொண்டு அடிமனைக்கு வீடுகட்டி குடியிருந்து வருவோர்களிடம் திம்மப்பநாயுடு வாரிசுதாரர்கள் மாத வாடகை பெற்று வந்தனர். இவர்கள் வசூல்செய்த வாடகைக்கு அப்பா அண்டு கோ என்று ரசீதும் கொடுத்துள்ளனர். திம்மப்பநாயுடுவின் வாரிசுதார்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லாததால் அடிமை பற்றிய  எந்த விதான உரிமையோ, அல்லது வாடகை வசூலிக்கவோ யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் 2009 ம் ஆண்டு அப்பா அண்டு கோவின்  6 வது தலைமுறையினரால் முன்னால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலராமன் தலைமையில்  மலர் வெளியிடப்பட்டது.  தற்போது  கே.சந்தானம் மற்றும் யு.பலராமன் ஆகிய இருவரும் திம்மப்பநாயுடுவின் ஆறாவது தலைமுறையின் வாரிசுகள் என்ற வகையில் 52 பேரிடம் பவர் பெற்றுள்ளதாக கூறியுள்ளனர். இவர்கள் தற்போது வீட்டு கட்டி குடியிருந்து வருவோரிடம் வாடகை கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளர்களை மிரட்டியும், ஒரு சிலர் வீட்டை விற்றதனால் வாங்கியவர்களிடம் பலவிதமான மிரட்டல் கொடுத்தும்,  அடியாட்களை வைத்து சில அடிமனைகளை விற்பனை செய்துள்ளனர். மேற்படி இந்த 52 வாரிசுதார்களுக்கு மேற்கூரிய அடிமனைக்கு எந்தவகையில் உரிமையுள்ளது  அல்லது உரிமைகளின் உயில் உள்ளதா என்று கேட்டால் அது பற்றி எந்த ஆவணங்களும் தெரிவிக்க மறுக்கின்றனர். மேலும் எந்தவித ஆவணங்கள் இல்லாமல்  52 வாரிசுதாரர்களின்  பவர் பெற்றதாக உள்ள ஜெராக்ஸ் காப்பியை வைத்தே பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த  வகையில் ரூ.4.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.

 வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் யு.பலராமனுக்கு கடந்த மே மாதம் 13 ம்தேதியிட்ட கடிதத்தில் இந்த அடிமனைக்கு உரிய ஆவணங்கள் கேட்டு பதிவு அஞ்சல் முலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதற்கு இந்நாள் வரையில் எந்தவிதமான பதிலும் அனுப்பாமல் உள்ளனர்.  இது அப்பட்டமான போலியான பவர் பெற்று மோசடி செய்துள்ளனர் என தெளிவாக தெரிகிறது.  மேலும் இவர்களை விசாரித்து தகுந்த ஆவணங்களை பெறவேண்டும் எனவும், அப்படி ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நில மோசடி கிரிமினல் வழக்கு தொடவேண்டும் என இச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்த அடிமனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள 150 ஆண்டுகளுக்கு மேலான ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் சன்னதி இருந்தது. இந்த கோயிலில் இப்பகுதி மக்கள் தினந்தோறும் பல நிகழ்ச்சிகளை நடத்தியும்  வழிபாடு செய்து வந்துள்ளனர். இந்த கோயிலுக்கு உரிமையுள்ளவர்கள் காலமாகிவிட்டதால், அவர்களுக்கு உரிமையுள்ள வாரிசுகளும் இதனை கவனிக்காமலும், ஆர்வம் இல்லாமலும் இருந்த நிலையில் இந்த கோயிலை இடித்து காலி மனையாக உருவாக்கி மேற்கூறிய பவர் ஏஜென்ட் பெற்றவர்களிடம் இந்த கோயில் நிலத்தை ஆர்.கோதண்டராமன் 

பெயரில் பத்திர பதிவு செய்துவிட்டனர். இவ்வாறு கமிஷனர் திரிபாதியிடம் அளித்த புகாரில் வடசென்னை வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்