முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கும் சிறப்பு சேவை

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

திருமலை,ஆக.2  - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் சாதாரண பக்தர்களும் சிறப்புசேவை தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் வாய்ப்பு பெறும் அதிர்ஷ்டசாலிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மின்னணு சீட்டு மூலம் தேர்வு செய்கிறது. திருப்பதி திருமலையில் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கான தோமாலை சேவை, அர்ச்சனை சேவை, வஸ்த்திர அலங்கார சேவை, சிறப்பு அபிஷேகம் போன்றவை முன்பெல்லாம் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கிடைத்து வந்தது. இப்போது சாதாரண பக்தர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ஜித சேவைகளுக்கு அனுமதி கோரும் பக்தர்கள் திருமலையில் மத்திய தகவல் தொடர்பு நிலையத்தில் வாளகத்தில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை அனுமதிக்கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பபடிவத்தில் தனிப்பட்ட தம்பதியரா என்ற விவரத்தை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு பதிவு செய்து கொள்ளும் பக்தர்கள் அவர்கள் மூலமாகவே பொத்தானை அழுத்தவிட்டு மின்னணு சீட்டு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த 5 நிமிடத்திற்குள் மின்னணு சீட்டு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பெயர்கள் மின்னணு திரையில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு அடுத்த 15 நிமிடங்களில் பக்தர்கள் அனுமதி சீட்டுக்களை அதற்குரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வஸ்திர அலங்கார சேவைக்கு ரூ.5,000, அபிஷேகத்திற்கு ரூ.2,500 ,தோமாலை சேவை, அர்ச்சனை சேவை ஒன்றுக்கு தலா ரூ440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிர்ஷட குலுக்கல் மூலம் ஏழுமலையான் சேவைக்கு அனுமதி கிடைத்த போதிலும் அடையாள அட்டை இல்லாதவர்கள் மின்னணு சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படமாட்டாகள். ஆதனால் பக்தர்கள் அவசியம் புகைப்படம் வைத்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் ஆர்ஜித சேவைக்கான அனுமதி சீட்டுக்கள் தோமாலை சேவையில் 142 டிக்கெட்டுகளும், அர்ச்சனை சேவையில் 95 டிக்கெட்களும், வஸ்திர அலங்கார சேவைக்கு 10 டிக்கெட்டுகளும் அபிஷேகத்திற்கு 9  டிக்கெட்டுகளும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்