முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் ஊழல் குறித்து தணிக்கை அறிக்கை தாக்கல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.6 - புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நடந்த ஊழல்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்து நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஆயிரம் கோடிக்கும் மேலாக ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து விளையாட்டுப்போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டையொட்டி காங்கிரசில் இருந்து கல்மாடி நீக்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்த மத்திய தணிக்கை குழு நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஒப்பந்தங்களில் நடந்துள்ள ஊழல்களில் டெல்லி மாநில அரசும் சம்பந்தப்பட்டுள்ளது. ஸ்டேடியங்கள் கட்டுதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வீரர்களுக்கு தங்கும் அடுக்குமாடி விடுதிகள் கட்டுதல், போட்டிக்கான உபகரணங்கள் வாங்குதல், டெல்லி நகரை அழகுபடுத்ததுதல்,லண்டனில் ஜோதி கொண்டுவந்தது. பாலம் அமைத்தல், உணவு விநியோகம், தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்தது உள்பட பல்வேறு வழிகளில் ரூ ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த ஸ்டேடியங்களை புதுப்பித்தல் மற்றும் சில திட்ட ஒதுக்கீடுகளிலும் நடந்துள்ள ஊழலில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்திற்கு தொடர்பு இருக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டில் முறைகேடுகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை, ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களும் பதில் சொல்ல வேண்டும். போட்டி செலவுகளை அரசு கண்காணித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. போட்டி அமைப்புக்குழு தலைவராக அமைச்சர் அந்தஸ்த்தில் உள்ளவரை நியமனம் செய்திருக்க வேண்டும். சுரேஷ் கல்மாடியை நியமித்தது ஏன் என்பதற்கு பிரதமர் அலுவலகம் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் பயணத்திற்கு சொகுசு பஸ்கள் விலைகள் அதிகம் குறிப்பிடப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. பல உபகரணங்கள் அவற்றின் விலையை விட பல மடங்கு கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. வாடகை கொடுப்பதிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்