மும்பை குண்டுவெடிப்பில் உள்நாட்டு சதி: சிதம்பரம்

Image Unavailable

புது டெல்லி,ஆக.6 - கடந்த ஜூலை மாதம் 13 ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டில் வலதுசாரி பயங்கரவாதமும் வளர்ந்து வருவதாக கவலை தெரிவித்தார். அண்மையில் மும்பை, புனே நகரங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் இப்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் உள்நாட்டு பயங்கரவாதிகளே இந்த சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக தெரிகிறது என்று தெரிவித்தார். இந்த விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் அருண்ஜெட்லி பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ