முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிநிலை அறிக்க்கை: கிறிஸ்தவ கூட்டமைப்பு பாராட்டு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.6 - மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பல சலுகைகளை அறிவித்த தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு  இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் இந்திய சுயாதீன திருச்சபைகள் பிஷப் எம்.பிரகாஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் 2011-2012-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மிகச்சிறப்பான அறிவிப்புகளைக் கொண்டுள்ளது. சொல்லுவதை செயலில் காட்டும் ஒப்பற்ற  முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் என்னென்ன செய்வோம் என்று

சொன்னாரோ அத்தனையையும் இன்று நிறைவேற்றும்வண்ணமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மகளிர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ள திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சியினரால் குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு nullரணமான நிறைவான அருமையான நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெற்று வரும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் சமூக nullநீதியை காக்கும் இந்த மகத்தான முடிவு நிச்சயமாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள் வழங்க ரூ.1441 கோடியும், இலவச அரிசி திட்டத்திற்கு ரூ.4500 கோடியும், இலவச தங்கத்தாலி திட்டத்திற்கு ரூ.514 கோடியும், மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மடிக்கணினி வழங்க ரூ.912 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு இந்த ஆண்டு இரண்டு செட் சீருடைகளும், அடுத்த ஆண்டு முதல் 4 செட் சீருடைகளும், வழங்கப்படும். 6 ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதிலாக சல்வர் கமீசும் வழங்கப்படும். வசதி இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்துவதை குறைப்பதற்காக 10-11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 1500 ரூபாயும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மிகுந்த வரவேற்புக்குரியவைகளாகும்.

ஏழை பெண்களுக்கு இரண்டு மகப்பேறுகள் வரை வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று சுகாதார வசதி அளிக்க நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படுவது பாராட்டுதலுக்கு உரியது.

13 மீன்பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் nullங்காக்கள் ஏற்படுத்தப்படும். மீன்பிடி அல்லாத காலங்களில் மீனவக்குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மீனவ குடும்பங்களின் நெஞ்சில் பேரானந்தத்தை ஆளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு முற்றிலுமாக nullநீக்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழ்நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஜெயலலிதா சொன்னால் அதை செய்துகாட்டுவார் என்பதை நாடறியும். இருண்ட தமிழகத்தை மீட்டெடுத்த ஜெயலலிதா தமிழகத்தை இனி இருள் இல்லாதபடி ஒளிமயமாக்குவார்.

ஏழைகளுக்கு சூயரிசக்தி மின்சாரத்துடன் கூடிய பசுமைவீடுகள் கட்டித்தருவதற்காக ரூ.1080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 60,000 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் வறுமை ஒழிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.

சிறுபான்மை மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஜெயலலிதாவின் அரசு தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவந்த மானியத் தொகையான ரூ.45 லட்சத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளதையும், உலமாக்கள் ஓய்வூதியத்தை ரூ.750-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளதையும், வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளை வழங்க ஒருமுறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளதையும் இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு, இந்திய சுயாதீன

திருச்சபைகள் மாமன்றம், இந்திய பிஷப்புகள் கவுன்சில் வரவேற்று பாராட்டுகிறது. 

மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துக்களை மீட்டு நிர்வாகத்தை சீரமைத்து வக்பு வாரியத்திற்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த முடிவு செய்துள்ளதையும் வரவேற்கிறோம்.

மொத்தத்தில் மிக அற்புதமான நிதிநிலை அறிக்கையை கொடுத்து தமிழகத்தின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்றிய ஜெயலலிதாவுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜெயலலிதாவின் சாதனைகள் மேல் சாதனைகள் செய்திட நாங்கள் மனதார வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று

பிரார்த்தனை ஏறெடுக்கிறோம். ​ 

இவ்வாறு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்ற பிரதம பேராயர், முன்னாள் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பிஷப் பிரகாஷ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago