முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி மீது மத்திய தணிக்கை குழு குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.7 - லக்னோ நகரில் டாக்டர் அம்பேத்கர்,கன்ஷிராம் ஆகியோர்களுக்கு நினைவகம் கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.66 கோடியை முதல்வர் மாயாவதி செலவழித்துள்ளார் என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பகுஜன்சமாஜ் கட்சியின் நிறுவனருமான கன்ஷிராம் ஆகியோர்களுக்கு நினைவகம் கட்டும் பணியை ரூ.2 ஆயிரம் கோடி செலவில் முதல்வர் மாயாவதி செயல்படுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழு ஆய்வு செய்தது. அதில் முதல்வர் மாயாவதி தேவையில்லாமல் ரூ.66 கோடியை வீண் செலவு செய்துதிருப்பது தெரியவந்துள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழு  தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த இரண்டு தலைவர்களின் நினைவகங்கள் கட்டப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்களை திரும்பத் திரும்ப அங்கும் இங்கும் கொண்டு சென்றதில் ரூ.15 கோடி கூடுதலாக செலவாகி உள்ளது. காண்ட்ராக்ட்டை மாற்றி அமைத்ததில் கூடுதலாக ரூ.22 கோடி செலவாகியுள்ளது. தலைவர்களுக்கு நினைவகங்கள் வரைபடம் மற்றும் மதிப்பீடு அடிக்கடி மாற்றப்பட்டதும் செலவு அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி முடிய மொத்தம் 2 ஆயிரத்து 451.93 கோடி செலவாகியுள்ளது. இதில் மாநில அரசானது 2007-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய ரூ.2 ஆயிரத்து 261.19 கோடியை மாயாவதி அரசு கொடுத்துள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சட்டசபையிலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த இரண்டு நினைவகங்கள் கட்ட செலவானது குறித்து கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2010-ம் ஆண்டு பிப்வரி மாதம் முடிய தணிக்கை செய்யப்பட்டது. அதில் நிதிமுறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததுள்ளது. இந்த திட்டங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்களை தேவையில்லாமல் முன்கூட்டியே வாங்கியதும் செலவு அதிகமானதற்கு ஒரு காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்