மாயாவதி விலக வலியுறுத்தி உ.பி. சட்டசபையில் அமளி

Image Unavailable

 

லக்னோ,ஆக.7 - உத்தரபிரதேச சட்டசபை மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே முதல்வர் மாயாவதியை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து சட்டசபையில் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன. சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியவுடனே பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுந்து அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். தேசிய ஊரக சுகாதார இயக்க ஊழல், கட்டாயப்படுத்தி விவசாய நிலங்களை கையகப்படுத்தியதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மாயாவதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

பா.ஜ.க. உறுப்பினர்களை தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாடி உறுப்பினர்களும் எழுந்து சென்று பேரவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். அவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல்வர் பதவியில் இருந்து மாயாவதி விலக வேண்டும் என்று குரல் எழுப்பினர். பேரவையை போலவே மேலவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு மேலவை தலைவர் கணேஷ் சங்கர் பாண்டே தொடர்ந்து வற்புறுத்தினார். பின்னர் மேலவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ