முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா விரைவில் குணமடைய அமிதாப்பச்சன் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.7 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ஆரக்ஷான் என்ற இந்தி திரைப்படத்தில் பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கல்லூரி முதல்வராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 12 ம் தேதி இந்தியா முழுவதும்  திரையிடப்பட இருக்கிறது. இட ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால் இந்த எதிர்ப்புகளையும் மீறி திட்டமிட்டபடி வருகிற 12 ம் தேதி இந்த படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட வெளியீடு தொடர்பான பணிகளை பார்வையிடுவதற்காக அமிதாப்பச்சன் நேற்று டெல்லி சென்றிருந்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும், அவர் நலம்பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஆரக்ஷான்  திரைப்படத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு அமிதாப் தனது லக்னோ பயணத்தை சமீபத்தில் ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்