முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் சிவன் கோயிலில் 7 லட்சம் பேர் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர்,ஆக.8 - அமர்நாத் பனிலிங்கம் குகைக்கோயிலில் இதுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் அமர்நாத் பனிலிங்க குகைக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரையாக சென்று சென்று வழிபட்டு வருகிறார்கள். இந்தாண்டு கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி யாத்திரை தொடங்கியது. வருகின்ற 13-ம் தேதியுடன் யாத்திரை முடிவடைகிறது. யாத்திரை தொடங்கியதில் இருந்து நேற்றுவரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் பனி லிங்கம் குகைக்கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். இந்தாண்டு தீவிரவாதிகள் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் பக்தர்கள் அதிக அளவு இயற்கை மரணமடைந்தனர். 96 பேர் மூச்சுதிணறல், கடும் குளிர், தவறி விழுதல் ஆகிய காரணங்களால் இவர்கள் இயற்கை மரணம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. அதையும் பொருட்படுத்தாமல் நேற்று பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 880 பேர் யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். யாத்திரை பாதுகாப்பாகவும் எந்தவித இடையூறும் இன்றி நடந்து கொண்டியிருக்கிறது. யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago