முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீலா தீட்ஷித் பதவி விலக பார்லி.யில் பா.ஜ. கோரிக்கை

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.9 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தியதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரியதாலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் என்கவுண்டர் பிரச்சினையை சமாஜ்வாடி எழுப்பியதாலும் பாராளுமன்ற இருசபைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியதில் நடந்துள்ள ஊழலில் டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்ஷித் சம்பந்தப்பட்டுள்ளார் என்று இந்திய தலைமை கணக்காளர் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த பிரச்சினையை நேற்று லோக்சபை கூடியதும்  பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து காமன்வெல்த் போட்டியில் ஊழல் புரிந்துள்ள முதல்வர் ஷீலா தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினர். மறுபக்கம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இதனையொட்டி சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபையில் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீரா குமார் உறுப்பினர்களை பார்த்து பலமுறை கேட்டுக்கொண்டார். கூச்சல் குழப்பம் ஓயாதாதல் சபையில் பகல் 11 மணி வரை ஒத்திவைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார். சபை மீண்டும் கூடியதும் அதே பிரச்சினைகளை இரண்டு கட்சி உறுப்பினர்களும் எழுப்பினர். பாரதிய ஜனதா உறுப்பினர்களும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்து மத்திய பகுதிக்கு சென்று முதல்வர் தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். போலி என்கவுண்டர் விவகாரத்தில் உத்திரப்பிரதேச அரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். ஷீலா தீட்ஷித் உரசு ஊழல் அரசு என்று பாரதிய ஜனதா கட்சியினரும் உத்திரப்பிரதேச மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியினரும் கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் கரிய முண்டா சபையில் அமைதி காக்கும்படி எவ்வளோ கேட்டுக்கொண்டும் உறுப்பினர்கள் யாரும் செவி சாய்க்காததால் சபையை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கிடையே 1948-ம் ஆண்டு தாமோதர பள்ளத்தாக்கு கழக சட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். 1962-ம் ஆண்டு சுங்கவரி சட்டத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பகல் 12 மணிக்கு பிறகு லோக்சபை மீண்டும் கூடியது. சபை கூடியும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று கரிய முண்டா அறிவித்தார். அப்போதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை நகலை சுட்டிக்காட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினர். அப்போதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தலைமை கணக்காளர் அறிக்கையின் நகலையும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் குறித்த தேசிய மனித உரிமை கமிஷன் அறிக்கையும் எடுத்துக்கொண்டு சபையின் மத்திய பகுதிக்கு சென்றனர். அங்கு முதல்வர் தீட்ஷித் பதவி விலக்கோரி பாரதிய ஜனதா உறுப்பினர்களும் முதல்வர் மாயாவதி பதவி விலக்கோரி சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் பலமாக கோஷம் போட்டனர். இவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், பிஜூ ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் அதிகாரித்தது. சபையை நடத்த முடியாது என்று கருதிய சபாநாயகர் மீரா குமார் சபையை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார். சபையில் கூச்சல் குழப்பம் நிலவியபோது பா.ஜ.தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோரும் இருந்தனர். 

ராஜ்யசபை நேற்று கூடியதும் சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபை தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார். ஆனால் சபை கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பனர்கள் அதே ஷீலா தீட்ஷித் விவகாரத்தை கிளப்பினர். காக் குற்றச்சாட்டையொட்டி முதல்வர் பதவியில் இருந்து தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். சபை தலைவர் அன்சாரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. சபையின் மத்திய பகுதிக்கு சென்று முதல்வர் தீட்ஷித்திற்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டியிருந்தனர். இதனால் சபையை நேற்று பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். 12 மணிக்கு பிறகு சபை மீண்டும் கூடியது . அப்போதும் சபையில் பா.ஜ.உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கூச்சல் குழப்பம் செய்து கொண்டியிருந்ததால் சபையை நாள் முழுவதுக்கும் அன்சாரி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்