சென்னை நகரை தூய்மையாக்க சிறப்பு தூய்மை திட்டம்

Image Unavailable

 

சென்னை, ஆக.9 - சென்னை நகரில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் அசுத்தமான நீரை 3 மாத காலத்திற்குள் வெளியேற்ற சிறப்பு தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110​ன் கீழ் சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அளித்த  அறிக்கை வருமாறு:

தமிழக மக்கள் அனைவரும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பதை உறுதி செய்வது எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் ஆகும்.  எனவே தான், ஆளுநர் உரையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், கிராமப்புறங்களையும், நகர்புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மேலும், 4.8.2011 அன்று, இந்த மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-12 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு​செலவு மதிப்பீட்டில், சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும், திடக் கழிவு மேலாண்மைக்காக ஒரு விரிவான திட்டம் தயாரித்து, கரிம சேமிப்புக்காக கிடைக்கப் பெறும் நிதியையும் பயன்படுத்தி, இத்திட்டத்தைச் செயல்படுத்த இவ்வரசு திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் குறித்த ஒட்டுமொத்த நிலையை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,  நான் 5.8.2011 அன்று ஹெலிகாப்டரில் சென்று வான் வழியாக ஆய்வு செய்தேன்.  அப்போது, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் ஆகிய இடங்களில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களையும் பார்வையிட்டேன்.  இந்த ஆய்வின் போது, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டிக் கிடந்தது தெரிய வந்தது.  

மேலும், சென்னை மாநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில், குடியிருப்புகளைச் சுற்றி  மழைநீnullர் மற்றும் கழிவுநீnullர் தேங்கியுள்ளதையும் கண்டறிந்தேன். மிகவும் அசுத்தமாக இருந்தது. எனவே, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரமான சூழலை உடனடியாகப் பெறுவதற்கு ஏதுவாக, முதற் கட்டமாக, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும்; குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள அசுத்தமான நீnullரை அகற்றுவதற்குமான சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம், அதாவது ​ மாஸ் கிளீனிங் புரோகிராம் ஒன்று செயல்படுத்தப்படும்.  இந்தத் தூய்மைப்படுத்தும் பணிகள், மூன்று மாத காலத்திற்குள் செய்து முடிக்கப்படும்.  இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 2011​-12​ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு​செலவு மதிப்பீட்டில் குறிப்பிட்டவாறு, விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ