தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்: முதல்வர்

Image Unavailable

 

சென்னை, ஆக.10 - தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் சிலர் தங்கள் தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள அனைவருக்குமே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும் என்றார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் புதுக்கோட்டை பூங்கா நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து காவிரிக் குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி பதிலளித்தபோது, முதலமைச்சரின் ஒப்புதலின் பேரில் நகராட்சி நிதியில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இந்த கேள்வி தொடர்பாக வைகைசெல்வன்(அ.தி.மு.க.) பேசும்போது, கடந்த ஆட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முறைப்படி செயல் படுத்தப்படாததால் அருப்புக் கோட்டை பகுதியில் பல இடங்களில் குடிnullநீர் விநியோகம் இல்லை. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீnullர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றார். 

இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என எல்லா திட்டங்களையும் இணைத்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல்​அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:​

கடந்த ஆட்சியில் மின்சாரம் வழங்குவதில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இதனால் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதுபோல் குடிநீnullர் வழங்குவதிலும் கடந்த ஆட்சியில் முறைகேடுகள், தவறுகள், குறைபாடுகள் இருந்தன. அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. உரிய அக்கறையும் செலுத்த வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 1/2 மாதங்கள்தான் ஆகிறது. ஒவ்வொரு குறைபாடுகளையும் கண்டுபிடித்து சரி செய்து வருகிறோம். மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்ய இந்த அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிnullநீர் வழங்குவதிலும் இந்த அரசு முன்னுரிமை அளித்து செயல்படும். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீnullர் வழங்கும் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ