முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ செலவாக குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 -   650 வகையான நோய்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரைதான் மருத்துவ செலவு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 950 வகையான நோய்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை காப்பீட்டு திட்டம் மூலம் செலவழிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.   

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டி.வெங்கடாசலம்(பெருந்துறை) பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள மருத்துவ திட்டத்தை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். ஆனால், இந்த திட்டத்தில் எவ்வளவு பயன் என்பதனை தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

உடனே முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, உறுப்பினரின் கன்னிப்பேச்சு என்பதால் குறுக்கிடக்கூடாது என்றிருந்தேன். ஆனால், அவர் இந்த திட்டம் குறித்து கூறியதால், விளக்கம் அளிக்கிறேன். 

முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ செலவு வழங்கப்பட்டது. ஆனால் புதிய திட்டமான, அ.தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் மருத்துவ செலவு வழங்கப்படும். இதன் மூலம் 4 வருடங்களில் 4 லட்சரூபாய் வரை மருத்துவ செலவு கிடைக்கும். 

முந்தைய திட்டத்தில் 642 வகையான சிகிச்சைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய திட்டத்தில் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்