முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரேஷ் கல்மாடி பிரச்சினையால் ராஜ்ய சபை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 10 - சுரேஷ் கல்மாடியின் நியமனம் குறித்த  பிரச்சினையால் ராஜ்ய சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ராஜ்ய சபை நேற்று காலை கூடியதும் கேள்வி நேரத்தின் போது காமன்வெல்த் விளையாட்டு  போட்டி அமைப்பாளராக சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினை,  காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது மத்திய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினை  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். தனது சொந்த அலுவலகம், பிரதமர் அலுவலகம், விளையாட்டு துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆட்சேபணைகளையும் பொருட்படுத்தாமல்  காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பாளராக சுரேஷ் கல்மாடி நியமனம் செய்யப்பட்டதற்கு  பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி ஏற்கனவே  கைது  செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சினையை கிளப்பி பா.ஜ.க. உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை அடுத்து சபையை நண்பகல் வரை  சபையின் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு சபை மீண்டும் கூடிய போது ராஜ்ய சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி குறுகிய கால விவாதம் ஒன்றில் பேசினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளும் குறித்து அவர் பேசினார்.

இது தொடர்பாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தாக்கல் செய்த அறிக்கை குறித்து அருண் ஜேட்லி விமர்சித்தார்.

அப்போது பா.ஜ.க. எம்.பி. ஒருவர் தெரிவித்த கருத்துக்கள்  ஆளும் கட்சி எம்.பி.க்களை கோபம் அடையச் செய்தது. இதனை தொடர்ந்து சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சபையை இரண்டாவது முறையாக சபையின் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார்.

பிறகு மீண்டும் சபை கூடிய போது சபையில்  நாகரீகமில்லாத வார்த்தைகளை பயன்படுத்த எந்த உறுப்பினருக்கும் உரிமை இல்லை என்று சபையின் துணைத் தலைவர் ரெஹ்மான்கான் எச்சரித்தார். யாரும் யார் மீதும் தகாத வார்த்தைகளை பயன்படுத்த அனுமதியில்லை என்றும், இதுபோன்ற வார்த்தைகள் சபை குறிப்பில் இடம் பெறாது என்றும் அவர் கூறினார்.

 ஆனால் துணை சபாநாயகர் சொன்னதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் சபையை  தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்