முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மைகளை மூடி மறைக்கிறது அரசு -அருண்ஜேட்லி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.10 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து மத்திய கணக்கு தணிக்கை குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைகளை மத்திய அரசு மூடிமறைக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின் ராஜ்யசபையில் காமன்வெல்த் ஊழல் தொடர்பான பிரச்சனை குறித்து குறுகிய கால விவாதம் ஒன்றில் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி பேசினார். காமன் வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்துள்ளதாக கூறி அதன் அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் மீது மத்திய கணக்கு தணிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய்மக்கான் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்று அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார். அஜய்மக்கான் தனது அறிக்கையில் சில குறிப்பிட்ட விவரங்களை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் பெரும்பாலான உண்மைகளை அவர் மூடி மறைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். 

அதிகமான விபரங்களை அஜய்மக்கான் வெளிப்படுத்தாதது ஏன் என்றும் ஜேட்லி கேள்வி எழுப்பினார். உண்மையான விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு தேவையில்லாத சில விபரங்களை மட்டும் அஜய் மக்கான் கூறியுள்ளார் என்றும் அவர் கூறினார். ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய ஊழலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அருண் ஜேட்லி கூறினார். காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளை பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களில் ஊழல்கள் நடந்துள்ளன. எனவே வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எவ்வளவு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவும், தேசிய கவலையாகவும் இருக்கிறது என்றும் அருண் ஜேட்லி கூறினார். இந்த ஊழலுக்கு உண்மையாகவே யார் பொறுப்பு என்பதை மூடிமறைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்