முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் புத்தகங்கள் வழங்கப்பட்டது.தமிழ்நாட்டில் மாநில பாட வாரியம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓ.எஸ்.எல்.சி. ஆகிய நான்கு பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்த 4 பாடத் திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டம் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை கடந்த ஆண்டு தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இந்தநிலையில் கடந்த மே மாதம் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர்பாடத் திட்டம் தரமானதாக இல்லை. அது மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தாது என்று தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து பெற்றோர் மற்றும் மாணவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. 6 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு, சுப்ரீம் கோட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. 

1 முதல் 10​ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று முதல்​ அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 

இதனால் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணியை பள்ளிக் கல்வித் துறை உடனடியாக தொடங்கியது. தமிழகம் முழுவதும் 65 கல்வி மாவட்டங்களில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் அச்சடித்து குடோன்களில் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. அந்தந்த மையங்களில் இருந்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பிரதிநிதிகள் வந்து பாடப் புத்தகங்களை நேற்று முதல் பெற்றுச் சென்றனர். தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கோடியே 25 லட்சம் மாணவ​ மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பாடப்புத்தகங்ககள் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் 4 மையங்களில் மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ராயபுரம் பி.கே.பழனிச்சாமி மேல் நிலைப்பள்ளி, அயனாவரம் சவுந்திர பாண்டியன் மேல் நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல் நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் புத்தகம் வினியோகம் நடைபெற்றது. அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பிரதிநிதிகள் வந்து இருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. வரிசைப்படி அவர்கள் சமச்சீர் புத்தகங்களை பெற்று மினி வேன்களில் கொண்டு செல்கின்றனர். சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் நேற்று காலை முதலே மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து மாணவர்களுக்கு சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களுடன் வருமாறு அனைத்து ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:​

சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் நீnullக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து விளக்கி கூற வேண்டும். nullநீக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும். இப்பணியை வருகிற 13-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். 15-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும். 16-ந்தேதி மாணவர்கள் சமச்சீர் புத்தகத்துடன் பள்ளிக்கு வரவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட சமச்சீர் பாடப் புத்தகங்கள் நேற்றே வழங்கப்பட்டன. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்