முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு: அமெரிக்கா

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.11 - விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் நடந்த இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பாவி தமிழர்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், தமிழ் பெண்களும் இதற்கு தப்பவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சேனல் 4 ல் அண்மையில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையிலும் போர் அத்துமீறல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் அமெரிக்கா ஆதரிக்கும். 

இலங்கை அரசும் போர் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் வெளிப்படையான விசாரணை தேவை. இதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. அப்போதுதான் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றார். இதனிடையே இலங்கையின் இறையான்மையில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்