முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா விஷயத்தில் பின்வாங்க போவதில்லை

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.11 - பலமான லோக்பால் மசோதா விஷயத்தில் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசரே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க லோக்பால் வரைவு மசோதாவை 10 பேர் கொண்ட கமிட்டியில் அரசு தரப்பில் ஒரு லோக்பால் வரைவு மசோதாவும் சிவில் பிரிவு தரப்பில் ஒரு லோக்பால் வரைவு மசோதாவும் தயாரிக்கப்பட்டது. லோக்பால் வரைவு மசோதாவில் பிரதமர்,நீதிபதிகளையும் உட்படுத்த வேண்டும் என்று சிவில் பிரிவு லோக்பால் வரைவு மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. பிரதமர் மற்றும் நீதிபதிகளை உட்படுத்தாமல் அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதாவை மட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் சேர்க்கக்கோரி மீண்டும் வரும் 16-ம் தேதியில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசரே அறிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பலமான லோக்பால் விஷயத்தில் நான் ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். மத்திய அரசு ஒதுக்கியுள்ளவைகளை அனைத்தையும் லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று ஹசரே வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் ஒன்றும் கிடையாது. அந்த மசோதா பயனற்றது. இது வெறும் கண்துடைப்புக்காக மத்திய அரசு தயாரித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஊழை ஒழிக்க நாங்கள் சட்டம் இயற்றியுள்ளோம் என்று மக்களிடம் சொல்வதற்காகத்தான் இந்த அதிகாரமற்ற மசோதாவை மத்திய அரசு தயாரித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நாங்கள் தயாரித்த லோக்பால் வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் அரசு தயாரித்துள்ள வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்டு மீண்டும் அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஹசரே கூறினார். 

மீண்டும் உண்ணாவிரதம் இருக்கும் திட்டம் பற்றி குறிப்பிட்ட ஹசரை, நாங்கள் வெறும் மகிழ்ச்சிக்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை. மக்களுக்காகும் நாட்டுக்காகவும்தான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்