முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி செளமித்பா சென் மீது ஊழல் புகார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.11 - கொல்கத்தா ஐகோட்டு நீதிபதி செளமித்ரா சென் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து ராஜ்யசபையில் வருகின்ற 17-ம் தேதி விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக செளமித்ரா சென் இருக்கிறார். இவர் அளவுக்கு அதிகமாக பணம் சேர்த்திருப்பதாகவும் அது தொடர்பாக தவறான தகலை கொடுத்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியையோ அல்லது ஐகோர்ட்டு நீதிபதியையோ பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு 3-ல் இருபங்கு மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதிகள் மீது விசாரணை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து ராஜ்யசபை தலைவர் அன்சாரி நியமித்த  ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவானது சென் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற ராஜ்யசபையில் தீர்மானம் கொண்டுவர கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அனுமதி அளித்தது. ஆனால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் சென் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தீர்மானம் குறித்து வருகின்ற 17-ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குற்றச்சாட்டு தீர்மானம் மீது ராஜ்யசபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அதே கூட்டத்தில் லோக்சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு கூட்டத்தில் இரண்டு சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு பாராளுமன்ற கூட்டம் வருகின்ற 8-ம் தேதி வரை நடக்கிறது. அதற்குள் இரண்டு சபைகளிலும் தீர்மானம் மீது விவாதம் நடந்து விவாதிக்கப்பட வேண்டும். சிக்கிம் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த தினகரன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஒரு குழுவையும் ராஜ்யசபை தலைவர் அன்சாரி நியமித்துள்ளார். ஆனால் கடந்த மாதம் இறுதியில் நீதிபதி தினகரன் ராஜினாமா செய்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்