முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிகோட்டில் இந்தியாவிலேயே பெரிய மசூதி கட்டப்படுகிறது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

துபாய்,ஆக.11 - இந்தியாவிலேயே பெரிய மசூதி ரூ. ஆயிரத்து 200 கோடி செலவில் கோழிகோட்டில் கட்டப்படுகிறது. இதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கட்டுகிறார்கள். தற்போது டெல்லியில் இருக்கும் ஜமா மஜீத்தான் பெரியதாக இருக்கிறது. இதை மிஞ்சும் அளவில் கோழிக்கோட்டில் கட்டப்படுகிறது. இந்த மசூதிக்கு ஷரே முபாரக் மஜீத் என்று பெயர். கேரள மாநிலம் கோழிக்கோடு புறநகர் பகுதியில் இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம். 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் மசூதி கட்டப்படும். இஸ்லாமிய நூல்நிலையம், ஓய்வு அறைகள், மாநாடு மண்டபமும் கட்டப்படும். நூல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினர்களும் வந்து படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மசூதியை சுற்றிலும் முகலாயர் தோட்டம் மாதிரி பசுமை தோட்டம் அமைக்கப்படும். பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரியும் கட்டப்படும். மருத்துவமனை,சுகாதார மையம் ஆகியவைகளும் கட்டப்படும். கடைகள், ஓட்டல்களும் மசூதி வளாகத்தில் கட்டப்படும் என்று இணை செயலாளர் டாக்டர் எம்.எ.ஹக்கிம் அழரி காந்தபுரம் தெரிவித்தார். மசூதியில் கட்டப்படும் நூல் நிலையம் இஸ்லாமிய ஆய்வு மையமாக இருப்பதோடு அறிவை வளர்க்கும் இடமாகவும் இருக்கும் என்றும் டாக்டர் அழகிரி தெரிவித்தார். இன்னும் 6 மாத காலத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கும். இந்த திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்கதாக இருப்பதோடு இஸ்லாமியர்களின் ஒரு முன்னேற்றமாக இருக்கும் என்று டாக்டர் அழகிரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்