முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் சதானந்தா சந்திப்பு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.11 - கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா நேற்று டெல்லியில் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்னும் 15 நாட்களுக்குள் தனது அமைச்சரவை மேலும் விஸ்தரிக்கப்படும் என்றும் கூறினார். கர்நாடகத்தில் ரூ. 16 ஆயிரம் கோடி சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக சதானந்த கவுடா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக அவர் நேற்றுமுன்தினம் டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று முன்தினமும் நேற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜ.க. பாராளுமன்ற குழுத் தலைவர் எல்.கே.அத்வானி, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி, பா.ஜ.க. முன்னாள் தலைவர்வர்கள் ராஜ்நாத்சிங், வெங்கய்யா நாயுடு ஆகியோரை சதானந்த கவுடா சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார். 

அப்போது மாநில வளர்ச்சி குறித்தும், மாநில அரசின் திட்டங்கள் குறித்தும் அவர் விவாதித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, தனது மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியை அமைத்துள்ள பா.ஜ.க. வளர்ச்சித் திட்ட பணிகளிலும், சட்ட ஒழுங்கு பராமரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 15 நாட்களுக்குள் தனது தலைமையிலான அமைச்சரவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்