முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகமது ஆரிப்புக்கு தூக்குத்தண்டனை உறுதி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.11 - டெல்லியில் செங்கோட்டையை தாக்கிய லஷகர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் என்ற அஷ்பாக்கிற்கு சுப்ரீம்கோர்ட்டு தூக்குத்தணடனையை உறுதி செய்தது. டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கில் டெல்லி செசன்ஸ் கோர்ட்டு ஆரிப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் முகமது ஆரிப் சார்பாக தாக்கல் செய்தது. ஐகோர்ட்டும் கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. ஆனால் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர் ஏற்கனவே சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. ஆனால் தமக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் முகமது ஆரிப் அப்பீல் செய்தான். இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நீதிபதிகள் வி.எஸ். ஸ்ரீபுகர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் தலைமையிலான பெஞ்சில் விசாரணை நடந்தது. விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதியே விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்குத்தண்டனையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆனால் தீவிரவாதி ஆஷ்பக்கிற்கு போலி இந்திய அடையாள அட்டை கொடுத்து உதவியதற்காக பாபர் மொஷின் பஹ்வாலா, சதகத் அலி மற்றும் மத்லோப் ஆலம் ஆகியோர்களுக்கு தலா 7 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரையும ஐகோர்ட்டு விடுதலை செய்திருந்தது. அதை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்