முக்கிய செய்திகள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டம்...!

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.12 - இந்தியாவில் மீண்டும் பெரிய தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதால் தீவிரவாதிகள் கைவரிசை காட்டக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து பாராளுமன்ற மேல்சபையில் மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் ஜிதேந்திரசிங் சில தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, 

இந்தியாவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல் கொடுத்துள்ளது. இலியாஸ் காஷ்மீரி இதற்கான திட்டத்தை வகுத்துள்ளான் என்பதை உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. அல்கொய்தாவும், ஹூஜ் அமைப்பும் சேர்ந்து தாக்குதல் திட்டங்களை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. என்றாலும், நாடெங்கும் பாதுகாப்பை உஷார்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: