முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு நடத்த தடை

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஆக.12 - மதுரை திருமலைநாயக்கர் மகாலில் படப்பிடிப்பு நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் வாழ்ந்த அரண்மனை தற்போது திருமலை நாயக்கர் மகால் என்று அழைக்கப்படுகிறது. இந்க மகால் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மகாலை உலகம் முழுவதும் இருந்தும் வரும் மக்கள் பார்த்து  ரசித்து செல்கிறார்கள். திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு நடத்துவதால் மகாலின் அழகும், பெருமையும் பாழாகி வருகிறது. மேலும் சிற்பங்களும் சிதைந்து விடுகின்றன. மேலும் படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் போலீசார் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை. இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

  பழமையும் பெருமையும் வாய்ந்த திருமலை நாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திருமலை நாயக்கர் மகாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி கலெக்டர், தொல்லியல் துறை துணை இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்