முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயிலில் 4வது நாளாக தேவபிரசன்னம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஆக.12 - திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோயிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் உள்ள நகைகளை மதிப்பிட்டு அறிக்கையை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோயிலுக்கு சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தது தெரியவந்தது. 

6 வது அறையை அவர்கள் திறக்க முயன்ற போது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வ குற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவபிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர். அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயணரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8 ம் தேதி கோயிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேவ பிரசன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 

மூன்றாவது நாளான நேற்று முன்தினம் ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர். நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும் பக்தர்களுக்கும் பிரச்சினை என அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்க கூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர் என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா என்ற எண்ணத்தில் நேற்று தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர். 

இதற்கிடையே நேற்று தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நிருபர்களிடம் தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு:

பத்மநாப சுவாமி கோயிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோயிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளக்கிரமங்கள் செய்யப்பட்டு உள்ளன. உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜா குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள நகைகள் அனைத்துமே மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்ரமாக அமைந்துள்ளது. 

இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோயிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் இயற்கை சீற்றம் ஏற்படும். கோயிலில் ஆச்சார அனுஷ்டானங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. கோயில் விக்ரகம் கீழே விழுந்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள நம்பிகள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார். கோயிலில் ரத்தம் சிந்தியிருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இதுபோல கோயிலில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் நாராயணரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago