முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.4 -பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கானா மற்றும் தாமஸ் விவகாரங்களால் அமளி ஏற்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று காலை இரு அவை கூடியதும் தெலுங்கானா விவகாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது. இதனால் லோக்சபையில் கேள்வி நேரம் தொடங்கியதும் தெலுங்கானா கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் மற்றும் விஜயசாந்தி ஆகியோர் தனிமாநிலம் கேட்டு வற்புறுத்தினர். இவர்களுக்கு பாரதிய ஜனதா தொண்டர்களும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். இதற்கிடையில் தெலுங்கு தேச எம்.பி. க்கள் ஒன்றுபட்ட ஆந்திரா தான்தேவை என்று கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இந்த பிரச்சனையை கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுப்பலாம் என்று சபாநாயகர் மீராகுமார் கூறியும் உறுப்பினர்கள் கேட்பதாக இல்லை. எனவே 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் 12 மணிக்கு கூடிய பிறகும் அமளி தொடர்ந்தது. இந்நிலையில்  ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து இம்முறை இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எனவே 12.30 மணி வரை மீண்டும் சபை ஒத்தி வைக்கப்பட்டது. 

ராஜ்ய சபையிலும் கேள்வி நேரத்தின் போது பாரதியஜனதா உறுப்பினர்கள் தெலுங்கானா பிரச்சனையை எழுப்பினர். அந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சபையில் இருந்தார். தனிமாநிலம் குறித்து அவர் அறிக்கை அளிக்கவேண்டும் என எம்.பி. க்கள் கோஷம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை தலைவர் ஹமீது அன்சாரி 15 நிமிடம் ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடிய பிறகு இதே நிலை நீடித்ததால் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மார்ச் 1ம் தேதி அன்றும் தெலுங்கானா பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்