முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,ஆக.13 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், சுபிட்ஷம் பெறவும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று 1008 திருவிளக்கு பூஜை கடந்த 1993 ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டும் நேற்று மாலை கோயில் திருவாட்சி மண்டபத்தில் மூன்றரை அடி உயர வெள்ளி விளக்கும், அஸ்தான மண்டபம், கடப்பள்ளி கம்பத்தடி மண்டபம், சண்முகர் சன்னதியில் மூன்றரை அடி உயரம் பித்தளை விளக்குகள் மலர்களாள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் உபயதாரர்களிடம் இருந்து பெற்று இலவசமாக வழங்கப்பட்டது. 

மாலை 6 மணிக்கு கோயில் சிவாச்சார்யார்கள் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை முடித்து பித்தளை விளக்குகளில் மகா லெட்சுமியை ஆவாரணம் செய்து விளக்கேற்றினர். அதைத் தொடர்ந்து மகாலெட்சுமி மந்திரங்கள் கூறி பூக்களால் அர்ச்சனை செய்தனர். மண்டபங்களில் அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் முன் வைத்திருந்த குத்துவிளக்குகளில் தீபமேற்றி மந்திரங்கள் கூறி பூஜை செய்தனர்.

மன்னர் கல்லூரி: பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாணவர்களின் படிப்பு சிறக்க 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. கல்லூரி செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். உப தலைவர் ராஜகோபால், உப செயலாளர் ராஜேந்திரபாபு, இயக்குனர் ராஜகோவிந்தசாமி, முதல்வர் நேரு, மகளிர் மேம்பாட்டு குழு பொறுப்பாளர் பரிமளநாயகி, பேராசிரியர் மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். 1008 மாணவிகள் தீபம் ஏற்றி பூஜை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago