முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமபந்தி விருந்து: அமைச்சர்கள் 33 கோயில்களில் பங்கேற்கின்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.14 -  ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நிதிவசதியுள்ள திருக்கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. இதில் சென்னை உள்ள 33 கோயில்களில் சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாட்டிலும், சமபந்தி விருந்திலும் கலந்துகொள்கின்றனர் .மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள கோயில்களில்  நடைபெறும் சிறப்பு வழிபாட்டிலும், சமபந்தி விருந்திலும் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் நிதி வசதியுள்ள திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இவ்வாண்டு மாநிலத்தில் 370 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து 15.8.2011 திங்கட்கிழமை அன்று சிறப்புடன் நடைபெறவுள்ளது. 

சென்னையில் பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் 33 திருக்கோயில்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க  உள்ளார்கள். மாநிலத்தின் பிற இடங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்திய சுதந்திரத் திருநாளை ஒட்டி நடைபெறும் இச்சிறப்புமிகு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சியை அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டப்படுகிறது.

15.08.2011 இந்திய சுதந்திர திருநாள், சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்துகளில் சென்னை நகரத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் விவரம்:

1.அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,திருவெற்றியூர்,  அவைத்தலைவர் டி.ஜெயக்குமார்.

2.அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்ர், நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

3.அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

4.அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில், அடையாறு மின்சார அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்.

5.அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு,  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி.

6.அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், புரசைவாக்கம்,   ஊரகத்தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேலு.

7.அருள்மிகு சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில், இராயப்பேட்டை, வீட்டுவசதி மற்றும் நகர்புர வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்.

8.அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தங்கசாலைத் தெரு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

9.அருள்மிகு மாதவபெருமாள் திருக்கோயில், மயிலாப்ர்,  உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்.

10.அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவேட்டீஸ்வரன் பேட்டை,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

11.அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்ர்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ.

12.அருள்மிகு செளமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால்.

13.அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், கே.கே.நகர்,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.

14.அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.

15.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், கோயம்பேடு,  பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்.

16.அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு தொழில்துறை அமைச்சர், எஸ்.பி.வேலுமணி.

17.அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு தாம்பரம்,ற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.

18.அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில், திருர்மலை. சிறப்புப்பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

19.அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை, அருள்மிகு காமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு,வருவாய்த்துறை அமைச்சர் பி.தங்கமணி.

20.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், போக்குவரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி.

21.அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், ராசப்பசெட்டிதெரு, கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் .செந்தூர் பாண்டியன்.

22.அருள்மிகு திருமேணியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா.

23.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், நுங்கம்பாக்கம்,  சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்.

24.அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில், பாடி. கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் பி.வி.ரமணா.

25.அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை,   தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

26.அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், சிந்தாதரிப்பேட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன்.

27.அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை,  செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன்.

28.அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.

29.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வில்லிவாக்கம், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன்.

30.அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், பெரியமேடு,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி.செல்லபாண்டியன்.

31.அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்.

32.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி.

33.அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், என்.எஸ்.சி.போஸ் ரோடு, பேரவைத் துணைத்தலைவர் ப.தனபால். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்