முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, ஆக.14 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் குவிந்தவண்ணம் உள்ளது. சனி, ஞாயிறு, திங்கள்(சுதந்திரதினம்)என்று 3 தினங்கள் அரசு விடுமுறையாக இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். தரிசனத்திற்காக பக்தர்கள் 3 கி.மீ.தூரம் வரிசையில் காத்திருக்கிறார்கள். இலவச தரிசனத்திற்கு14 மணி நேரமும் ரூ. 50 கட்டண தரிசனத்திற்கு 11 மணி நேரமும், ரூ. 300 கட்டண தரிசனத்திற்கு 6 மணிநேரமும் ஆகிறது. சில நாட்களுக்கு முன்பு மராமத்து பணிகளுக்காக திருப்பதி 2 மலைப்பாதை மூடப்பட்டிருந்தது. தற்போது ஏராளமான வாகனங்கள் வந்ததால் திருப்பதி முதல் மலைப் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் 2 வது மலைப் பாதையையும் நாளைவரை(திங்கட்கிழமை) திறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைந்தது. நேற்று காலை டிக்கட் கவுண்டரில் கூட்டம் அலை மோதியதால், ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்