முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து போர் விமானங்கள் இந்தாண்டுக்குள் சப்ளை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

மாஸ்கோ,ஆக.14 - ரஷ்யாவில் இருந்து நவீனப்படுத்தப்பட்ட மிக் ரக போர் விமானங்கள் மேலும் 4-ஐ இந்தியாவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் சப்ளை செய்யப்பட உள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே இந்த ஒப்பந்தம் மேலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுத தொழில்நுட்பத்தில் ரஷ்யா முன்னேறி இருப்பதால் அந்த நாட்டில் இருந்து நவீனரக ஆயுதங்களையும் போர் விமானங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தியாவுக்கும் ரஷ்யாவில் உள்ள மிக் கம்பெனிக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இந்தியாவுக்கு மிக் -29கே-கேயுபி ரக போர்விமானங்களை இந்தியாவுக்கு ரஷ்யா சப்ளை செய்து வருகிறது. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தப்படி மீதம்முள்ள மிக்ரக விமானங்கள் 4 ஐ இந்தாண்டு இறுதிக்குள் மிக் கம்பெனி சப்ளை செய்யும் என்று கம்பெனியின் டைரக்டர் ஜெனரல் செர்ஜி கரோத்கோவ் நேற்றுமுன்தினம் மாஸ்கோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த 4 போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியாவிலேயே முழுமுழுக்க தயாரிக்கப்பட்ட விக்ரம் போர்க்கப்பலில் இந்த 4 போர் விமானங்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: