முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாசலப் பிரதேசத்தில் பேய் மழையால் நிலச்சரிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஷில்லாங்,ஆக.14 - நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப்பிரதேச மாநிலத்தில் கடந்த பல நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனையொட்டி நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஹெலிகாப்டர் விமானங்கள் உணவுப்பொட்டலங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது நாட்டின் வடகிழக்கு பகுதியில் திபெத் மற்றும் சீன எல்லையையொட்டியுள்ள அருணாசலப்பிரதேசத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவில் கிழக்கு கேமாங்க் மாவட்டத்தில் அதிக அளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மீட்புப்பணியில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டால் மேலும் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்வதற்கு மேலும் ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதேசமயத்தில் மோசமான காலநிலை நிலவுகிறது. இதனால் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை சப்ளை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்