முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்களூரில் பா.ஜ.க. - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மங்களூர், ஆக.14 - மங்களூரில் பா.ஜ.க. மற்றும்  காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர். மங்களூரில் கல்வியாளர் வெங்கட ரமணாவைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ரேணுகா பிரசாத் என்பவர் அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சுளியா என்ற இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே இடத்தில் பாரதிய ஜனதா கட்சியினரும் வேறு ஒரு பிரச்சினையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவைப் பற்றி தக்சிண கன்னடா காங்கிரஸ் தலைவர் ராமநாத்ராய் அவதூறாக பேசியதற்கு  கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதை  அடுத்து அங்கு வந்த போலீசார்  இரு கட்சியினர் மீதும்  தடியடி பிரயோகம்  செய்தனர். இதன் பிறகு இரு கட்சிகளையும் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிதறி அடித்து கலைந்து  சென்றனர்.

சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago