முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அராக்ஷன் இந்தி படத்தை எதிர்த்து போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.14 -  இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வசங்களையும் காட்சிகளையும் கொண்டுள்ள அமிதாப்பச்சன் நடித்துள்ள ஆராக்ஷன் இந்தி படத்தை தமிழகத்தில் திரையிட கூடாது என்று பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இடஒதுக்கீட்டை எதிர்க்கும் ஆரக்ஷான் படம் நேற்று இந்தியா முழுவதும் ரிலீசானது. தமிழகத்திலும் இப்படம் வெளியாகியுள்ளது. ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து பா.ம.க.வினர், விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரக்ஷான் படம் ஓடும் சத்யம் தியேட்டர் முன்னால் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை தடை செய், பெரியார், அம்பேத்கார் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச் செல்வன், சாரனாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் தியேட்டருக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.மயிலாப்nullர் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், வக்கீல் எழில் கரோலின், பகலவன், குமரப்பா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியினர் சத்யம் திரையரங்கு அருகில் அதன் மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் தலைமையில் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பஞ்சாப், உத்தரபிரதேசம், ஆந்திர மாநிலங்கள் தடை செய்துள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்