முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் அறியும் உரிமை சட்டம் ஊழலை எதிர்க்கும் கருவியாகும் சுப்ரீம் கோர்ட் கருத்து

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 16 - தகவல் அறியும் உரிமை சட்டம் ஊழலை எதிர்க்கும் கருவியாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு எழுதுபவர்கள் தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்ய அனுமதிப்பது குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதனை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தேர்வு எழுதியவர்கள் அவர்களுடைய விடைத்தாள்களை ஆய்வு செய்ய தேர்வு நடத்தியவர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்வு நடத்துவோர் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து இவ்வழக்கில் அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் ஊழலை எதிர்க்கும் ஒரு வலுவான கருவியாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்