முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னாஹசாரே கைது: பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய சுஷ்மா சுவராஜ் கோரிக்கை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 17 - அன்னா ஹசாரே கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிக்கை மட்டும் போதாது, பிரதமர் மன்மோகன் சிங்தான் அறிக்கை  தாக்கல்  செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சித்தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் அன்னா ஹசாரே கைது நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிக்கை போதாது என்றார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்தான் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் அறிக்கை  தாக்கல் செய்தால் அதன் மீது  பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம் என்றும்  பிரதமர் அறிக்கை  தாக்கல் செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  நாங்கள் அப்புறம் முடிவு  செய்வோம் என்றும் சுஷ்மா கூறினார்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மத்திய அரசு ஜனநாயக விரோதமான முறையை பின்பற்றி வருகிறது என்றும் சபாநாயகரின் உத்தரவை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  மீறி செயல்படுகிறார் என்றும் சுஷ்மா குற்றம் சாட்டினார்.
இந்த பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். ஆனால் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால்  தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
முதலில் 4 மத்திய அமைச்சர்கள் ஹசாரேவை சந்தித்து பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அப்புறம்  ஹசாரே ஒரு ஊழல்வாதி என்று  சொல்கிறார்கள். இப்படி மத்திய அரசு மாறி மாறி பேசி வருகிறது என்றும் சுஷ்மா கவலைப்பட்டுக்கொண்டார்.
ஜெ.பி. பூங்காவில்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. ஆனால் தடை உத்தரவு அமுலில் இல்லாத  மயூர் விஹார் பகுதியில்தான்  ஹசாரே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்