முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 பாலங்களை ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆக.- 17 - 12 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா  காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையால் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய பாலங்களை காணொலிக் காட்சி  மூலமாக திறந்துவைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், சரக்குகள் போக்குவரத்திற்கும், மக்கள் பணத்திற்கும் சாலைகள் பெரும் பங்காற்றி வருகின்றன என்பதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் தரமான சாலைகள் அமைத்தும், மக்களுக்குத்தேவையான பகுதிகளில் புதிய சாலைகளை அமைத்து, போக்குவரத்து எளிமைப்படுத்தி, விபத்தில் சாலைகள் அமைய பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
சென்னை மாநகரில் போக்குவரத்து மிகுந்த மிக முக்கியமான சாலையான ஈ.வெ.ரா. பெரியார் சாலை, சென்னை அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப் பணிகளின் கீழ் 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய பாலம், வேலூர் மாவட்டம் பாணாவரம் என்ற இடத்தில் இரயில்வே கடவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம், கோரையாறு என்ற இடத்தில் கோரையாற்றின் குறுக்கே 2 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம், நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் என்ற இடத்தில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் ஆகிய 4 புதிய பாலங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவியுடன், திருவண்ணாமலை மாவட்டம், கொளமஞ்சனூர் என்ற இடத்தில் 6.65 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், திண்டுக்கல் மாவட்டம், பாளையம் என்ற இடத்தில் 83 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம் மற்றும் குஜிலியம்பாறை என்ற இடத்தில 49 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், திருச்சி மாவட்டம், அய்யாத்தூர் என்கிற இடத்தில்  3.31 கோடி ரூபாய் மதிப்பிலும், குணசீலம் - கல்லூர் என்கிற இடத்தில் 2.75 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், விருதுநகர் மாவட்டம், சோழபுரம் என்கிற இடத்தில் 2.37 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் என்கிற இடத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பாலம், அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் என்கிற இடத்தில் 1.06 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பாலம் என மொத்தம் 8 புதிய பாலங்களை 18 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
அப்போது, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இந்த புதிய பாலத்தை திறந்து வைத்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து சீரான போக்குவரத்துக்கு வழி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்கள் பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமைச் செயலார், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச்செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்