முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் நோக்கி இன்று ஹசாரே ஆதரவாளர்கள் பேரணி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 17 - அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான  லோக்பால் மசோதாவை வலியுறுத்து  உண்ணாவிரதம் மேற்கொள்ள இருந்த  அன்னா ஹசாரே நேற்று கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை கண்டிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் இன்று பாராளுமன்றத்தை நோக்கி  பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள்  போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.
இந்த பேரணி  இந்தியா கேட்டிலிருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்தை சென்றடையும் என்றும் போலீஸ் தடையை மீறி இந்த பேரணியை நடத்த தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் ஹசாரே குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.
இந்த பேரணி அமைதியாகவும் அகிம்சை வழியிலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மத்திய  அமைச்சர்களின்  முடிவின்படிதான்  அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டுள்ளார். மற்றபடி டெல்லி போலீசார் இந்த  கைது  முடிவை எடுக்கவில்லை என்றும் பூஷன் தெரிவித்தார்.
டெல்லி போலீசாருக்கு சுதந்திரம் இல்லை அவர்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக இருக்கிறார்கள். அதனால்தான் மத்திய அமைச்சர்களின் சொல்படி அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்றும் பூஷன் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago