முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலம் குறித்து ராகுல்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஆக.- 17 - சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நலமாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இம்மாத ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றார். அவர் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு உதவியாக ராகுல் காந்தியும் உடன் சென்றிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டங்களிலும் நாடாளுமன்ற உத்திகள் வகுக்கும் குழுவிலும் சோனியா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ராகுல் அறுவை சிகிச்சைக்குப் பின் சோனியா காந்தி நலமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்