முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நல்லக்கண்ணு பேட்டி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

தருமபுரி,ஆக.- 17 - தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணு தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தமிழக சட்டசபை தேர்தலின் போது அமைக்கப்பட்ட அ.தி.மு.க. கூட்டணி விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் தொடங்கும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக அதிகாரங்களை வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு நேரடி தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்.  1976 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நில மீட்பு போராட்டத்தை நடத்திய போது அப்போதைய முதல்வர் கருணாநிதி இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்றார். நில பறிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக போலீசாரிடம் புகார் செய்கின்றனர். இதில் பொய் வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கை இருக்க வாய்ப்பில்லை. நில பறிப்பை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நில மோசடிகளை தடுக்க தி.மு.க. தவறி விட்டது. 

லோக்பால் சட்டம் குறித்த முன்வடிவு கடந்த 1969 ல் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 41 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

பிரதமரும் ஒரு எம்.பி.தான் என்பதால் லோக்பால் சட்ட வரம்புக்குள் அவரையும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஊழலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தினால் அது சட்ட விரோதம் என்று மத்திய அரசு தடுக்கிறது. இது காங்கிரசின் இரட்டை நிலப்பாட்டையை காட்டுகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்