முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதகலவரதடுப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு இல.கணேசன் வரவேற்பு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ராமநாதபரம் ஆக 17  மத்திய அரசு கொண்டுவரவுள்ள மதகலவர தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பா.ஜ.க. முன்னாள் தலைவர் இல.கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இலங்கை வெளியுறவு செயலாளர் கோத்தபயராஜபக்ஷே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவதுாறாக பேசியுள்ளார். அது கடும் கன்டனத்துக்குரியது. இந்த நிலையில் அவர் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் சேனல் 4 வர்ணனையாளர் மிகவம் அழகாகவம் கவர்ச்சியாகவம் இருக்கிறார். ஆனால் அவர் ; ஒன்றும் கற்பழிக்கப்படவில்லையே கொல்லப்படவில்லையே  என்று மிகவும் கேவலமாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
நடப்பு நாடாளுமன்ற கூட்ட தொடரில் கொண்டுவர இருக்கும் மதகலவர தடுப்பு மசோதா மிகவம் ஆபத்தான ; ஒரு மசோதாவாகும். இந்த மசோதாவுக்கு அரம்பகட்டத்திலேயே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமின்றி மற்ற மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார.; இது பாராட்டுக்குரியது. அன்னாஹசாரேவின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங் உண்ணாவிரதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. மகாத்மாகாந்தி உண்ணாவிரதத்தால்தான் பல பெரிய காரியங்களை செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது வேதனைக்குரியது இவ்வாறு கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago