முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் கொலை குற்றச்சாட்டு: எகிப்து முன்னாள் அதிபர் கோர்ட்டில் ஆஜர்

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

கெய்ரோ,ஆக.- 17 - முன்னாள் எகிப்து அதிபர் கோஸ்னி முபாரக் ஊழல் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெய்ரோ நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆஜரானார்.  30 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் அதிபராக இருந்த கோஸ்னி முபாரக்கை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 18 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தின் முடிவில் கடந்த பிப்ரவரி 11 ம் தேதி அதிபர் பதவியில் இருந்து முபாரக் நீக்கப்பட்டார். இவரது ஆட்சியின் போது ராணுவ அமைச்சராக இருந்த முகமது உசேன் தந்துவி, இப்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் ஊழல் மற்றும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு உத்தரவிட்டது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபபட்டன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபட்சம் முபாரக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆகஸ்ட் 3 ம் தேதி ஆஜரான முபாரக் மீண்டும் நேற்று முன்தினம் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை செப்டம்பர் 5 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்